search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆவுடையானூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் 96 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கிய போது எடுத்தபடம். அருகில் பழனிநாடார் எம்.எல்.ஏ.

    ஆவுடையானூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் 96 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்

    • மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையை கலெக்டர் பார்வையிட்டடார்.
    • முகாமில் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை, மாற்றுதிறனாளி நலத்துறையின் மூலம் ஒருவருக்கு உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆவுடையானுார் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நலத்திட்ட உதவிகள்

    முகாமில் 9 பயனாளி களுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை, மாற்றுதிறனாளி நலத்துறை யின் மூலம் ஒருவருக்கு உதவி தொகைக்கான ஆணை, 4 பேருக்கு வரன்முறை பட்டாவிற்கான ஆணை, 7 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, ஒருவருக்கு வாரிசு சான்று, கணவரால் கைவிடப் பட்டோருக்கான சான்று, தாட்கோ மூலம் 34 பேருக்கு தூய்மை பணியாளர் அடை யாள அட்டை என மொத்தம் 96 பயனாளிகளுக்கு ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 851 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    முன்னதாக மறுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெரும் வகையில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியி னையும் கலெக்டர் ரவிச் சந்திரன், பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன், தோட்டக் கலைததுறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, தென்காசி தாசில்தார் சுப்பையன், தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) சண்முகம், மாவட்ட காவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபி என்ற குத்தாலிங்கராஜன் (ஆவுடையானூர்), தினேஷ் (அரியப்பபுரம்), உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×