என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நகை பறித்த தொழிலாளி கைது
  X

  நகை பறித்த தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அங்கன்வாடி ஊழியரிடம் நகை பறித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
  • தங்கச் சங்கிலி பறித்த வாலிபரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

  மதுரை

  மதுரை புது விளாங்குடி, ராமமூர்த்தி நகரை சேர்ந்த சங்கர்குமார் மனைவி மாலதி (வயது 33). பழைய விளாங்குடி அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று மதியம் இவர் அங்கன்வாடி மையத்தில் இருந்தார். அங்கு வந்த வாலிபர், மாலதி அணிந்திருந்த நகையை பறித்து தப்பினார்.

  மாலதி 'திருடன், திருடன்' என்று கூச்சல் போட்டார். அந்த நேரத்தில் கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி தலைமையில் போலீசார் தற்செயலாக ரோந்து வந்தனர். அவர்கள் மாலதியிடம் தங்கச் சங்கிலி பறித்த வாலிபரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

  அவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்ன மராவதி, பெரியார் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது தெரிய வந்தது. மதுரையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பம் நடத்த பணம் இல்லாததால், மாலதியிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×