search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    மேலூரில் பெரியாறு பாசன ஒரு போக பாசனவிவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

    பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

    • பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால், குறிஞ்சி குமரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மேலூர் பகுதி ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் தேதி குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    முன்னுரிமை பெற்ற பூர்வீக பெரியார் ஒருபோக பாசன பகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பாசன தண்ணீர் திறக்கவும், அதன் பின்னரே விரிவாக்க கால்வாய் களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

    கிராம பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையும், கூலி உயர்வும் ஏற்பட்டு விவசாய பணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

    எனவே பாசன தண்ணீர் திறந்து 2 மாத காலத்திற்காவது விவசாயம் நடைபெறும் பாசனப்பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

    அதற்கு அனுமதி இல்லாவிட்டால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும். தற்போது பெய்த மழையில் பெரியார் அணை தண்ணீர் கடலில் கலந்து வீணாக கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதனால் தமிழக விவசாயிகள் நலன் கருதி பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்க தமிழக எல்லைப் பகுதியில் மற்றொரு அணை கட்ட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×