என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர்- 6 தொழிலாளிகள் காயம்
  X

  சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர்- 6 தொழிலாளிகள் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர்- 6 தொழிலாளிகள் காயமடைந்தனர்.
  • விபத்து தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திருமங்கலம்

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பிரானூர் பாடர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (20), சரக்கு வேன்டிரைவர். இவர் நேற்று பக்கத்து ஊரான மேலூர் கதிரவன் காலனியைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர்கள் 6 பேருடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்திற்கு சரக்குவேனில் புறப்பட்டார்.

  எம்.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள கல் பாலத்தில் வந்தபோது திடீரென சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் விக்னேஷ், தொழிலாளர்கள் ராமரத்தினசாமி(52), ரகு(35), செல்லப்பா(42), சுப்பிரமணி(52), நல்லையா(47), பால்பாண்டி(48) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×