search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கீகார கடிதம் இல்லாத அ.தி.மு.க. வேட்பாளருக்கு 30-ந் தேதி வரை கெடு
    X

    வேட்பு மனு பரிசீலனையில் பங்கேற்றவர்கள்.

    அங்கீகார கடிதம் இல்லாத அ.தி.மு.க. வேட்பாளருக்கு 30-ந் தேதி வரை கெடு

    • அங்கீகார கடிதம் இல்லாத அ.தி.மு.க. வேட்பாளருக்கு 30-ந் தேதி வரை கெடு விடுக்கப்பட்டது.
    • அங்கீகார கடிதம் வழங்கினால் மட்டுமே இரட்டை இலை சின்னம் வழங்கப்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவி வகித்து வந்த அ.தி.மு.க.கவுன்சிலர் அன்னலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    காலியாக உள்ள இந்த பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ந்தேதி நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    இதில் நேற்று பா.ஜ.க. வேட்பாளர் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கப்படவில்லை என்பதால் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.அ.தி.மு.க.வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த ராகிணிதேவி அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் கட்சியின் அங்கீகார கடிதம் கிடைக்காமல் நேற்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 11 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    அ.தி.மு.க.வேட்பாளர் அங்கீகார கடிதம் வழங்காததால் வாபஸ் நாளான வருகிற 30-ந்தேதி சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக அங்கீகார கடிதம் வழங்கினால் மட்டுமே இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனிச்சின்னம் வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.

    Next Story
    ×