search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்- எம்.எல்.ஏ. பேச்சு
    X

    ராஜன் செல்லப்பா

    அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்- எம்.எல்.ஏ. பேச்சு

    • ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்.
    • அ.தி.மு.க. கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு-தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அ.தி.மு.க. கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டார் கொட்டாரத்தில் நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    எத்தனை பெரிய பொறுப்புகள் இருந்தாலும் இயக்கத்தின் அடித்தளம் கிளைக்கழகம் தான். இந்த ஒன்றியத்தில் 177 கிளை கழகங்கள் உள்ளது அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அம்மாவின் அரசு மக்களுக்காக குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்தது. இதனை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அது மட்டுமல்லாது.

    மதுரை மாவட்டத்திற்கு அம்மா ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை நாம் கூற முடியும். நாம் கொண்டு வந்த திட்டங்களை தான் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதேபோல் அம்மா உணவகங்களை பாதிக்குமேல் மூடிவிட்டனர் தி.மு.க. மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. ஆனால் கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம், பல்வேறு இடங்க ளில் கருணாநிதி சிலை என்று அவரது தந்தையார் பெயரில் திட்டங்களை செய்ததை தவிர எந்த சாதனையும் ஸ்டாலின் செய்யவில்லை.

    தினந்தோறும் 5 கொலைகள், கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றம் என சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டது.தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு ஒன்றிய அரசு எனச்சொன்னார்களா?

    அ.தி.மு.க. என்றாலே ராணுவக்கட்டுப்பாடு.நேற்று கட்சி அலுவலகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடை பெற்று உள்ளது.தலைமை கழகமும், பொதுக்குழுவும் எந்த முடிவு எடுத்தாலும் அதை தலைவர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கட்டுப்படு வார்கள். ஒற்றைத்தலைமை குறித்து தனிப்பட்ட கருத்தை நிர்வாகிகள், பொறு ப்பாள ர்கள் சொல்லவில்லை. தொண்டர்களின் கருத்தை சொல்லி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×