search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு -சிறப்பாக பணியாற்றிய 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்  -நெல்லை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்
    X

    சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவருக்கு கலெக்டர் விஷ்ணு பரிசு வழங்கிய காட்சி.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு -சிறப்பாக பணியாற்றிய 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ் -நெல்லை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.
    • 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.

    பாராட்டு சான்றிதழ்

    இத்திட்டத்தின்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளர்களிடம் இருந்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக ஆதார் எண் விபரம், பெயர், முகவரி, வாக்காளர் அட்டை எண் மற்றும் பிற விபரங்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இப்பணியில் 100 சதவீதம் சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தொகுதிக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.அவர்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கினார்.

    கலெக்டர் பேச்சு

    அப்போது கலெக்டர் விஷ்ணு பேசும்போது, பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை விபரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×