search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி
    X

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி.


    கோவில்பட்டியில் அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி

    • கோவில்பட்டியில் பிரதான சாலையில் உள்ள ஓடையை முறையாக தூர்வாரி, தடுப்புச்சுவரை கட்டி நடைமேடையை உடனடியாக அமைக்க வேண்டும்.
    • குற்ற செயல்களை தடுப்பதற்கு 33 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா, கோவில்பட்டியில் உள்ள பேரமைப்பு அலுவல கத்தில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கோவில்பட்டியில் பிரதான சாலையில் உள்ள ஓடையை முறையாக தூர்வாரி, தடுப்புச்சுவரை கட்டி நடைமேடையை உடனடியாக அமைக்க வேண்டும்.

    பிரதான சாலைகளில் முக்கிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். புதுரோடு, மார்க்கெட் சாலை உள்ளிட்ட சாலைகளை செப்பனிட வேண்டும். பிரதான சாலை - மாதாங்கோவில் தெரு சந்திப்பில் உள்ள குறுகிய பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மூலம், கோவில்பட்டி பகுதியில் நிலவும் குற்ற செயல்களை தடுப்பதற்கு 33 கண்கா ணிப்பு காமிராக்கள் பொருத்தி செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாமல் உள்ளது.

    எனவே, குற்ற நடவடிக்கை களை தடுக்க கண்காணிப்பு காமிரா அவசியம் என்று கூறும் காவல் துறை, செயல்படாமல் உள்ள அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் உடனடி யாக செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதை யின் இருபுறமும் காலதாம தமின்றி அணுகுசாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உணவு பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு, சேவை வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கடைகளுக்கான வாடகை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

    பேட்டியின்போது, மண்டல தலைவர் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், செயலர் யேசு ராஜா, பொருளாளர் கண்ணன், தொழில் அதி பர்கள் கணேஷ் பேக்கரி ரவிமாணிக்கம், கார்த்திக் மிட்டாய் கார்த்திகேயன், கே.என்.ஆர். கடலை மிட்டாய் கண்ணன், முத்துராஜ், மோகன், சிவா னந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×