என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில்காமராஜர் பிறந்தநாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- கட்டுரைப் போட்டியில் கழுகுமலை லூசியா மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துமாரி முதல் பரிசும், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கே.ஆர். வித்யாலயா பள்ளி மாணவி வீரலட்சுமி முதல் பரிசும் பெற்றனர்.
- போட்டிகளில் கலந்து கொண்டவர்களை பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கம் எஸ்.எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்க ளுக்கான போட்டிகள் நடைபெற்றது. ஆங்கிலத்துறைத் தலைவர் பிரேமலதா வரவேற்றார்.
கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். கல்லூரிப் பொருளாளர் மகேஷ், கல்லூரி உறுப்பினர்கள் செல்வகணேஷ் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
கவிதைப் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சினி முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் கழுகுமலை லூசியா மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துமாரி முதல் பரிசும், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கே.ஆர். வித்யாலயா பள்ளி மாணவி வீரலட்சுமி முதல் பரிசும் பெற்றனர். ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை லூசியா மேல்நிலைப் பள்ளி வென்றது.
போட்டிகளில் கலந்து கொண்டவர்களைப் பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன். முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் கற்குவேல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுளை முதல்வர் தலைமையில் உதவிப் பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.