search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar Birthday Celebration"

    • கட்டுரைப் போட்டியில் கழுகுமலை லூசியா மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துமாரி முதல் பரிசும், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கே.ஆர். வித்யாலயா பள்ளி மாணவி வீரலட்சுமி முதல் பரிசும் பெற்றனர்.
    • போட்டிகளில் கலந்து கொண்டவர்களை பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கம் எஸ்.எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்க ளுக்கான போட்டிகள் நடைபெற்றது. ஆங்கிலத்துறைத் தலைவர் பிரேமலதா வரவேற்றார்.

    கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். கல்லூரிப் பொருளாளர் மகேஷ், கல்லூரி உறுப்பினர்கள் செல்வகணேஷ் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

    கவிதைப் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சினி முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் கழுகுமலை லூசியா மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துமாரி முதல் பரிசும், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கே.ஆர். வித்யாலயா பள்ளி மாணவி வீரலட்சுமி முதல் பரிசும் பெற்றனர். ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை லூசியா மேல்நிலைப் பள்ளி வென்றது.

    போட்டிகளில் கலந்து கொண்டவர்களைப் பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன். முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் கற்குவேல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுளை முதல்வர் தலைமையில் உதவிப் பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.

    • பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், காமராஜரின் சிறப்புகளையும், தொண்டுகளையும் எடுத்து கூறினார்.
    • ஆசிரியை அனிபுளோரா காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், காமராஜரின் சிறப்புகளையும், தொண்டுகளையும் எடுத்து கூறினார். மேலும் அவரது பிறப்பையும், செயலையும் அர்த்த முள்ளதாக மாற்றியதை போல் மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலை நாட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியை அனிபுளோரா காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    ×