என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை
  X

  வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
  • நீட் தேர்வுக்கு பயிற்சிக்கு சென்று தேர்வு எழுதியிருந்தார்.

  கரூர்:

  கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள கொள்ளுதண்ணிபட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் மகள் ப்ரீத்திஸ்ரீ (18). இவர் துளசிக்கொடும்பில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு, நீட் தேர்வுக்கு பயிற்சிக்கு சென்று தேர்வு எழுதியிருந்தார். லாலாபேட்டை அருகேயுள்ள வேங்காம்பட்டியில் உள்ள தாய்மாமா வீட்டில் ப்ரீத்திஸ்ரீ தங்கியிருந்துள்ளார்.

  நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என வருத்தத்தில் இருந்த ப்ரீத்திஸ்ரீ வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து லாலாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ப்ரீத்திஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதே போல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கீழகுப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர் மகள் லட்சுமி (15). இவர் புனவாசிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் பள்ளியில் நடந்த முதல் இடைத்தேர்வுகளை (மிட்டேர்ம்) லட்சுமி சரிவர எழுதவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த லட்சுமி வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து லாலாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருததுவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×