search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.31 லட்சம் அபராதம் வசூல்
    X

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.31 லட்சம் அபராதம் வசூல்

    • சாலை விபத்துக்கள் பெரும்பாலும் தலை கவசம் அணியாமலும், அதிக வேகம்
    • 3 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்ததாக ரூ.31 லட்சத்து 21 ஆயிரம் அபராதம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்தாவது:-

    கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபத்து நடை பெற்ற பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் பெரும்பாலும் தலை கவசம் அணியாமலும், அதிக வேகம் மற்றும் விதிமீறி இயக்கப்பட்டு வருவதாலும், சில நேரங்களில் மனிதர்களின் கவனமின்மையாலும் சாலை யினை கடந்து போவதாலும் ஏற்பட்டுள்ளது ஆய்வு கூட் டத்தின் மூலம் கண்ட றியப்பட்டுள்ளது. 18 வய திற்குட்பட்டவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கு வதை பெற்றோர் தவிர்த்திட வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செ ல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டு ம். கடந்த மாதம் ஏற்பட்ட 2 விபத்துகள் 17 வயதிற்குட்பட்ட உரிமம் இல்லாத வாகனம் ஒட்டியதால் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூன்) ஹெல்மெட் அணியாமலும், 3 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தற்காகவும் அபராதமாக ரூ.31 லட்சத்து 21 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை அந்தந்த அலுவலக பணி காவலர்கள் உறுதி செய்திட வேண்டும். சாலையோரங்களில் மின் விளக்கு இல்லாத இடங்களில் மின்விளக்குகளை பொருத்திடுமாறு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    தொடர் விபத்து நடக்கும் பகுதிகளை வட்டார போக்குவரத்து அலுவலர் அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்து விபத்தினை தடுப்பதற்கான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்திட அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பள்ளிக்கூ டங்களிலும் ஏற்படுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு குழுக்க ளை தொடர்ந்து செயல் படுத்திடவும் மாதந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலை விதிகளை பின்பற்றியும், மிதமான வேகத்துடனும், கவனமாகவும் விபத்தின்றி இயக்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ஜெரால்டு ஆன்றனி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×