search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் நடைபாதையில் இருந்த 100 கடைகள் அகற்றம்
    X

    கன்னியாகுமரியில் நடைபாதையில் இருந்த 100 கடைகள் அகற்றம்

    • மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகை எதிரொலி
    • பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேசிய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    இந்த நடை பயணத்தின் தொடக்க விழா வருகிற 7-ந் தேதி மாலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் தமிழக முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதற்காக ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

    அங்குஉள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு தனது நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மண்டபம் பஜாரில் நடைபாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அகற்றப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி நிர்வாகம் இதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

    Next Story
    ×