என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. கூலி தொழிலாளி. தினந்தோறும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுவார். இதனால் அவர் மனைவி மற்றும் மகன் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய பசுபதி செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் பகுதிக்கு சென்று பாலத்தின் கீழே உள்ள இரும்பு ராடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
பெசன்ட் நகர், 3-வது அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சந்திரன் (வயது 64). கடந்த 26-ந் தேதி இரவு பணியில் இருந்த போது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளச்சேரியை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர்கள் முரளி கந்தன் மற்றும் ரமேஷ், மனோஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைதான மணிகண்டன் அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இது கொலையுண்ட மணிகண்டனுக்கு தெரிந்தது.
இதனால் மணிகண்டனை கூலிப்படையினரை ஏவி தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக கைதான 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவரது மைத்துனர் அய்யப்பன் (50). அவர்கள் 2 பேரும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக தங்கியுள்ளனர்.
மேலும் இவர்கள் 2 பேரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்கள் 2 பேரும் உறவினர்கள் திருமணத்துக்காக தங்களது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தனர். இன்று மதியம் 11 மணி அளவில் ஊர் திரும்பினார்கள். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி பொருட்களும் திருடப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சம்.
கொள்ளை போனதில் தலா 40 பவுன் நகைகள் கிருஷ்ணனுக்கும், அய்யப்பனுக்கும் சொந்தமானது.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுராந்தகத்தை அடுத்த குளத்துநல்லூர் கிராம மக்களுக்கு அப்பகுதியில் உள்ள 2 கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கிணறுகள் வற்றி விட்டதால் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள களக்காடி, புத்திரன்கோட்டை கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் - புதுச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 அரசு பஸ்கள் உள்பட 4 பஸ்களை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்ததும் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களா உள்ளது.
இதனை சுற்றி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் உள்ளன.
இதன் நுழைவு வாயில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஆலத்தூரை அடுத்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பல ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல்வெளிகள் தற்போது காய்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பகல் 1 மணியளவில் இங்குள்ளஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி காய்ந்த புற்கள், செடி, கொடிகளில் பற்றி எரிந்தது.
தகவலறிந்ததும் சிறுசேரி, திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி இதே வளாகத்தில் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவான்மியூர்:
சென்னையில் மெரினா கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் வார விடுமுறை நாட்களில் பைக்ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பையும் மீறி பைக் ரேஸ் அரங்கேறி வருகின்றன. பைக் ரேசால் அப்பாவி பொதுமக்கள் உயிர் பலி ஆவது தொடர்கதை ஆகி வருகிறது.
மயிலாப்பூரில் நேற்று இரவு வாலிபர்கள் நடத்திய பைக்ரேசில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாப்பூர், அடையாறு மேம்பாலத்தில் இருந்து பாரிமுனை வரை நேற்று இரவு வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்தன.
அப்போது, மயிலாப்பூர் மந்தைவெளி சாலையில் அதே பகுதியை சேர்ந்த மீனா, யசோதா ஆகியோர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மீனா, யசோதா மீது பயங்கரமாக மோதியது. இருவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 வாலிபர்களும் சறுக்கியபடி கீழே விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். யசோதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பைக்ரேசில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் ஆழ்வார்பேட்டையை சேர்ந்த முகமது இஸ்மாயில், பிரபு என்பது தெரிந்தது.
படுகாயம் அடைந்த அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் 2 பேரையும் அடையாறு போக்குவரத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாப்பூரில் இருந்து நேற்று 2 பிரிவாக பைக் ரேஸ் நடந்து உள்ளது. ஒரு பிரிவினர் அடையாறு மேம்பாலத்தில் இருந்து பாரிமுனை வரையிலும், மற் றொரு தரப்பினர் மெரினா சாலை வழியாக ஜெமினி பாலம் வரையிலும் சென்று உள்ளனர். விபத்தில் சிக்கிய மீனாவும், யசோதாவும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு நடந்து சென்று உள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் மோதி மீனா பலியாகி விட்டார்.
பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் மீது போலீசார் கடுமையான சட்டப்பிரிவு களில் நடவடிக்கை எடுக் காததே இது போன்ற தொடர் சம்பவம் நடைபெற காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, “பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் மீது சாதாரண பிரிவுகளிலேயே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் குறைந்த அபராதத் தொகையை கட்டிவிட்டு மீண்டும் ரேசை தொடங்கி விடுகின்றனர். பொதுமக்கள் உயிரோடு விளையாடும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு விதித்து உள்ள தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மக்களுக்கு கிடைத்து உள்ள அடிப்படை உரிமையை பறிப்பதாகும். இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க கூடிய உத்தரவு.
சமூக வாழ்க்கையில் உள்நாட்டு போர் என்ற கலவர சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. தோல் தொழில்களில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது ஒரு தலைபட்சமான மோசமான முடிவாகும். மத்திய அரசு உத்தரவை திரும்ப பெறாமல் உறுதியாக இருந்தால் நாடு முழுவதும் கிளர்ச்சி ஏற்படும் என்பதை மோடி அரசு உணரவேண்டும்.

இதை மாநில அரசுகள் கண்டித்து உள்ளன. மக்கள் எதை சாப்பிடவேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போடமுடியாது. 3 ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டம் தாக்கப்படுகின்றன. ஜனநாயகம் சிறுமைப்படுத்தப்படுகிறது.
இந்துத்துவா, மதவெறி தத்துவத்தை மக்கள் மீது திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு, பாரதீய ஜனதா கட்சியிடம் வெளிப்படை தன்மை இல்லை. மதசார்பற்ற ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ள வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி என்ன செய்ய உள்ளது? என்பதை பார்த்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த மணமை, வி.எஸ்.பி.நகர், சாலையோரத்தில் வீட்டு மனை பிரிவு காலி இடம் உள்ளது. நேற்று இரவு அங்கு கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பார்த்தபோது காருக்குள் ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் உடல் கருகிய நிலையில் இருந்தது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எரிந்து கரிக்கட்டையாக காணப்பட்டது.
மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார் முழுவதும் எரிந்து விட்டதால் பலியானவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியாமல் இருந்தது. இதையடுத்து காரின் என்ஜின் நம்பரை வைத்து விபத்துள்ளான வண்டியின் எண் டி.என்.22 ஏ.கியூ.3597 என்பது தெரியவந்தது.
அந்த கார் குரோம்பேட்டை கமலா நகரை சேர்ந்த ரமாதேவி என்பவரது பெயரில் பதிவாகி இருந்தது. அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்று இருந்ததும் தெரிந்தது. அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. வீடும் பூட்டி கிடக்கிறது.
இதனை வைத்து பலியானவர்கள் ரமாதேவி மற்றும் அவரது கணவர், குழந்தை என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.
இது தொடர்பாக பெங்களூரில் உள்ள ரமாதேவியின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்த பின்னரே இறந்து போனார்கள் பற்றிய முழு விபரம் தெரியவரும்.
கார் தீப்பிடித்து எரிந்த இடமான தனியார் மனைப் பிரிவு சாலையோரத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ளது. மனைப் பிரிவின் இரும்பு கதவுகளை திறந்து கார் உள்ளே சென்று இருக்கிறது.
சாலையில் கார் வந்த போது தீப்பிடித்து இருந்தால் மனைப்பிரிவின் கதவில் மோதியதற்கான அடையாளம் இருக்கும். ஆனால் அங்கு எந்த தடயமும் இல்லை.
மேலும் மனைப் பிரிவின் உள்ளே சில நிமிடங்கள் அந்த கார் சுற்றிவந்ததை சிலர் பார்த்து உள்ளனர். இரவு நேரத்தில் மனை பிரிவுக்குள் கார் வந்தது எதற்காக? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்து உள்ளது.
எனவே சுற்றுலா சென்ற போது அவர்களை மர்ம கும்பல் நகை-பணத்துக்காக கடத்தி கொன்று எரித்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சுற்றுலாவுக்காக தனியாக கார் டிரைவர் யாரையேனும் அவர்கள் அழைத்து சென்றனரா? என்றும் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக பலியானவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து கடைசியாக பேசியவர்கள் விபரத்தை சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:
மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே மேலாளராக பணிபுரிந்து வருபவர் சந்திரன் (வயது 47). அதே ரெயில் நிலையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கன்னையாகுமார் (26) என்பவர் புக்கிங் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று திருப்பதியில் இருந்து புதுச்சேரி சென்ற ரெயிலில் இருந்து பார்சல் ஒன்று மேல் மருவத்தூர் ரெயில் நிலையத்தில் திறக்கப்பட்டது. இந்த பார்சலை கன்னையாகுமார் அங்கிருந்து எடுத்துச்சென்று புக்கிங் அலுவலகத்தில் வைத்து டெலிவரி செய்ய வேண்டும்.
ஆனால் கன்னையாகுமார் அந்த பார்சலை எடுக்காததால் அது ரெயில் நிலைய பிளாட் பாரத்திலேயே கிடந்தது. இதை பார்த்த ரெயில்வே மேலாளர் சந்திரன் இது பற்றி கன்னையாகுமாரிடம் கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இருவரையும் பயணிகள் விலக்கி விட்டனர்.
இந்த மோதலில் ரெயில்வே மேலாளர் சந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் செங்கல்பட்டு ரெயில்வே போலீசில் புகார் செய்தார். கன்னையாகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் ஏரிகரை தெருகக்கன் பாலம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை காந்திநகரை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பொது மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது சில பெண்கள் கையை பிடித்து இழுத்தனர்.
இதனால் போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தள்ளு முள்ளு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். 15 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அங்கு அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருவான்மியூர்:
சென்னை பெசன்ட் நகர் 3-வது அவென்யூவில் எலியட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் அடையாறு தாமோதரபுரம் புது நகரை சேர்ந்த சந்திரன் (62) என்பவர் கடந்த 5 வருடமாக காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு சந்திரன் காவல் பணியில் இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் சந்திரனை இழுத்து போட்டு இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். அவரது அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் வந்ததை பார்த்ததும் அந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர்.
உயிருக்கு போராடிய சந்திரனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.கொலை செய்ய வந்த வாலிபர்கள் 3 பேரும் முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை.
சந்திரனை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்ற விபரம் தெரியவில்லை. இது பற்றி பெசன்ட் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் இருவர் மட்டும் போலீசில் பிடிபட்டனர். மற்ற இருவர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட இருவரிடமும் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை மேற் கொண்டனர்.
அதில் கஞ்சா பொட்டலங்களும், டிபன்பாக்ஸ் ஒன்றில் 3 நாட்டு வெடி குண்டுகளும் இருந்தது. விசாரணையில் ஓட்டேரி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட நெடுங்குன்றத்தைச் சேர்ந்த ஆனந்த பார்த்திபன், ஊரபாக்கத்தைச் சேர்ந்த தீபக்ராஜ் என்பதும் தெரிய வந்தது.
இருவர் மீதும் கொலை வழக்குகள் இருப்பதும், சில நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
ஆனந்த பார்த்திபனை அவரது எதிரிகள் கொலை செய்ய சுற்றி வருவதை அறிந்து இப்பகுதியில் தலைமறைவாக இருப்பதும் தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் இப்பகுதியில் யாரையாவது கொலை செய்ய நாட்டு வெடி குண்டுகளுடன் சுற்றியுள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் இருந்து தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






