என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதம்பாக்கத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் கைது
    X

    ஆதம்பாக்கத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் கைது

    ஆதம்பாக்கத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய 15 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் ஏரிகரை தெருகக்கன் பாலம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை காந்திநகரை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பொது மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது சில பெண்கள் கையை பிடித்து இழுத்தனர்.

    இதனால் போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தள்ளு முள்ளு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். 15 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இச்சம்பவத்தால் அங்கு அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×