என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
காஞ்சீபுரம் அருகே குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. கூலி தொழிலாளி. தினந்தோறும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுவார். இதனால் அவர் மனைவி மற்றும் மகன் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய பசுபதி செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் பகுதிக்கு சென்று பாலத்தின் கீழே உள்ள இரும்பு ராடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story






