என் மலர்
செய்திகள்

குடிநீர் வழங்க கோரி 4 பஸ்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
மதுராந்தகம் அருகே குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்கள் உள்பட 4 பஸ்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த குளத்துநல்லூர் கிராம மக்களுக்கு அப்பகுதியில் உள்ள 2 கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கிணறுகள் வற்றி விட்டதால் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள களக்காடி, புத்திரன்கோட்டை கிராமத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் - புதுச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 அரசு பஸ்கள் உள்பட 4 பஸ்களை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்ததும் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story