என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழிங்கநல்லூர் அருகே என்ஜினீயர்கள் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
    X

    சோழிங்கநல்லூர் அருகே என்ஜினீயர்கள் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

    சோழிங்கநல்லூர் அருகே என்ஜினீயர்கள் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவரது மைத்துனர் அய்யப்பன் (50). அவர்கள் 2 பேரும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக தங்கியுள்ளனர்.

    மேலும் இவர்கள் 2 பேரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணிபுரிகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் உறவினர்கள் திருமணத்துக்காக தங்களது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தனர். இன்று மதியம் 11 மணி அளவில் ஊர் திரும்பினார்கள். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி பொருட்களும் திருடப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சம்.

    கொள்ளை போனதில் தலா 40 பவுன் நகைகள் கிருஷ்ணனுக்கும், அய்யப்பனுக்கும் சொந்தமானது.

    இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×