என் மலர்
காஞ்சிபுரம்
மலேசியாவில் 25-ந்தேதி உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மலேசியா புறப்பட்டு சென்றார்.
ஆலந்தூர்:
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மலேசியா புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவில் 25-ந்தேதி உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்து இருக்கிறார்கள். அழைப்பை ஏற்று செல்கிறேன். காவிரிநீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை வலியுறுத்தி உள்ளோம்.
கமல் கட்சி தொடங்கிய விழாவில் பங்கேற்ற டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தி.மு.க.வை பற்றி பேசி இருந்தார். பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் நிறைவேற்றி ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி பிரபலமானவர் கெஜ்ரிவால். அதனால் டெல்லி முதல்-அமைச்சராக ஆகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் டெல்லி முதல்-அமைச்சரான நாள் முதல் இதுவரை பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

உத்திரமேரூர் கருணை இல்லத்தில் இறந்த முதியோர் மர்ம மரணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியோர்கள் மரணம் மற்றும் உடல் அடக்கம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாலேஸ்வரம் பகுதி மலையடிவாரத்தில் கடந்த 2006-ம் ஆண்டு அனாதை இல்லம் என்ற பெயரில் ஆதவரற்ற முதியோர்களுக்காக இந்த இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு இருப்பவர்களை வெளியே அனுப்பவதில்லை,
அன்பு இல்லம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இல்லத்தின் அருகிலேயே உயிர் நீப்போர் காப்பகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த இடங்களில் பணம் செலுத்தினால் மட்டுமே முதியவர்களுக்கு பராமரிப்பு அளிக்கப்படுகின்றது,
ஆனால் இந்த இல்லத்தில் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவது சேவை மனப்பான்மையிலா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.
இங்கு தங்கி இருப்பவர்கள் விபரம் அரசுத் துறையினருக்கு தெரியுமா? அங்குள்ளவர்கள் பற்றிய விபரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளதா? என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். வெளிநாட்டுப் பணம் மூலம் இந்த முதியோர் கருணை இல்லம் நடத்தப்படுவதாக தெரிகிறது. இங்கு மரணம் அடைபவர்களின் எலும்புகள் உடல் உறுப்புகள் கடத்தப்படுகிறதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுபோன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் விடை அளிக்க வேண்டும்.
சாதாரணமாக பொது இடத்தில் அனாதையாக இறப்பவர்கள் குறித்து அவர் யார்? என்று காவல் துறையினரின் பல்வேறு விசாரணைக்குப் பிறகுதான் அந்த உடல் அடக்கம் செய்யப்படும்.
ஆனால் அதிக அளவில் இந்தக் கருணை இல்லத்தில் இறப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் இதுகுறித்து இதுவரை மேற்கொண்ட விசாரணையின் விபரங்கள் வெளியிடப்படாததும், நடவடிக்கை எடுக்காததும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews

திருப்போரூர் கோவிலில் பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர்:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று மாசிமாத கிருத்திகை விழா நடைபெற்றது. இதை யொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டை அடித்து சரவணப்பொய்கையில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். பல பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி காவடி எடுத்து மாடவீதி வலம் வந்து முருகனை தரிசித்தனர்.
கிருத்திகையையொட்டி மாடவீதியின் பல இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் விடிய விடிய காவடி எடுத்து மாடவீதி வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த பேபி (வயது 65) என்பவர் மாசி கிருத்திகையை யொட்டி திருப்போரூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுக்க உறவினர்களுடன் வந்திருந்தார்.
இன்று காலை அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் பேபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews

உத்திரமேரூர் கருணை இல்லத்தில் இறந்தவர்கள் பற்றி முறையான விவரம் இல்லாததால் இதுபற்றிய முழுமையான தகவல்களை சேகரிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருணை இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய் கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் இந்த கருணை இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது அதே இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ் (72), அன்னம்மாள் (74) ஆகியோரையும் அதே வேனில் பிணத்துடன் அழைத்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொது மக்கள் அந்த வேனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை தனியாக பிரித்து வெளிநாட்டில் விற்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து காஞ்சீபுரம் கோட்டாட்சியர் ராஜி உள்பட 6 துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பது தெரியவந்தது.
கருணை இல்லத்தின் அனுமதி கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் சுமார் 40 முதல் 50 முதியோர் மர்மமான முறையில் இறப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 முதியோர்கள் இறந்து இருந்தனர். அவர்களை பற்றிய முறையான விபரங்கள் கருணை இல்ல நிர்வாகிகளிடம் இல்லை.
கருணை இல்லத்தின் பின்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய பிண அறை உள்ளது. சுவற்றில் இருக்கும் சிறுசிறு பெட்டி போன்ற அறைகளில் இறந்தவர்களின் உடல்களை சிமெண்டு போட்டு மூடி விடுகின்றனர்.
மர்மமான முறையில் உடல் அடக்கம் செய்யப்படுவதால் அதில் இருந்து எஞ்சும் எலும்புகள் கடத்தப்படலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இறந்தவர்கள் பற்றி முறையான விபரம் இல்லாததால் இதுபற்றிய முழுமையான தகவல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே எத்தனை பேர் இறந்தனர்? எவ்வாறு உடல் அடக்கம் செய்யப்பட்டது? என்ற விபரத்தை சேகரிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த கருணை இல்லத்தில் 350-க்கும் மேற்பட்ட முதியோர் உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். இது பற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்படும்.
கருணை இல்லத்தில் தங்கி இருக்கும் பலர் வெளியில் செல்வதாக கூறினர். பெரும்பாலானோருக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. உறவினர்கள் முகவரியை முறையாக கூறினால் அவர்களை சட்டப்பூர்வமாக ஒப்படைக்கலாம்’ என்றார். #tamilnews

வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண் என்ஜினீயர் லாவண்யா, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். #robberattacked #womanengineer
ஆலந்தூர்:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(வயது 26). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தாழம்பூரில் தங்கி, நாவலூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் லாவண்யா, வேலை முடிந்து தனது விடுதிக்கு மொபட்டில் சென்றபோது, ஒட்டியம்பாக்கம் அரசன்கழனி-காரணை சாலையில் கொள்ளையர்கள் அவரை கத்தியால் தாக்கி நகைகள், செல்போன்கள், மடிக்கணினி மற்றும் மொபட்டை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த லாவண்யா, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் என்ஜினீயர் லாவண்யா, சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாய்பாபா சிலையை வணங்கினார்.
பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த லாவண்யா, நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவை சேர்ந்த பெண் என்பதால் என்னை யாரும் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்கள் மட்டுமின்றி, அனைத்து பெண்களும் எப்போதும் எச்சரிக்கையாகவும், சாதூர்யமாகவும் இருக்க வேண்டும்.
என்னை நேரில் சந்தித்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். தமிழக காவல்துறையினர் என்னை ஒரு சகோதரியாக பாவித்தனர். எனக்கு 2-வது வாழ்க்கை கிடைத்து உள்ளது. இன்னும் 10 நாட்களில் முழுமையாக குணமடைந்து பணிக்கு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #robberattacked #womanengineer
செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த புலிபாக்கம் காட்டுப்பகுதியில் உள்ள காந்தலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சாந்தி. மகன்கள் ராஜேஷ், விக்னேஷ்.
பாலுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு துணையாக மனைவி சாந்தி ஆஸ்பத்திரியில் இருந்தார்.
இதனால் விக்னேஷ் நேற்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்று தூங்கினார்.
வேலைக்கு சென்றிருந்த ராஜேஷ் நள்ளிரவு வீட்டுக்கு வந்தபோது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து வாலிபர் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். #Tamilnews

பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இன்று 2-வது நாளாக வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்ற முதியோர்களை பராமரிக்கும் புனித ஜோசப் ஹாஸ்பீஸஸ் என்ற தனியார் கருணை இல்லம் உள்ளது.
நேற்று முன்தினம் இந்த கருணை இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டைகளுடன் ஆண் பிணம் கொண்டு வரப்பட்டது. அதனுடன் திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.
இதனால் பயந்தபோன அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் வேனை மடக்கி பிடித்து சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்த விஜயகுமாரின் உடலை பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு கொண்டு சென்றதும் அப்போது தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் உள்ள அதே கருணை இல்லம் கிளையில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாளை பிணத்துடன் அதே வேனில் அழைத்து வந்ததும் தெரிந்தது.
இது தொடர்பாக வேன் டிரைவர் ராஜேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் எலும்புகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நேற்று காலை காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு 340 முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்களிட மும் கருணை இல்ல நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உடல்களை வைக்கும் பெரிய கட்டிடம் இருப்பதை கண்டு பிடித்தனர்.
மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் மர்மமாக இறந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தங்கி இருந்த முதியவர்கள் தங்களை வெளியே விட மறுப்பதாக அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இதுபற்றி முழுமையான விவரத்தை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறியதாவது:-
கருணை இல்லம் முறையாக அனுமதி பெற்றே இயங்குகின்றது. ஆதரவற்ற அனாதைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படு கின்றது. சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் உடல்கள் புதைக்கப்படுவதில்லை, எரிக்கப்படுவதில்லை மாறாக நவீன முறையில் அடக்கம் செய்யப்படுகின்றது. அரசின் எந்தவிதமான விசாரணைக்கும் நாங்கள் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜி கூறும்போது, ‘இந்த கருணை இல்லத்தில் காவல், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரசு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்தும், அவர்களின் பெயர், வயது, இங்கு எப்போது அழைத்து வரப்பட்டார்கள் என்பது குறித்து அவர்களிடமே கேட்டு விபரங்கள் பெறப்பட்டு தவறு நடந்து இருந்தால் அது குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா கூறுகையில், ‘இந்த கருணை இல்லத்தின் லைசென்ஸ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே காலாவதி ஆகி விட்டது. பிறகு லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்து உள்ளார்கள் அது பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதற்கான ஆய்வு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. #tamilnews

ஸ்ரீபெரும்புதூரில் ஜெயல்லிதா பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், நகர செயலாளர்குமார், முன்னாள் சேர்மன் சிவக்குமார், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் மிஷின், சைக்கிள், இஸ்திரிபெட்டி, வேட்டி-சேலை ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினர்.
அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, ராமச்சந்திரன் எம்.பி., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்தியா,
ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் போந்தூர் சேட்டு, தொழிலதிபர் வடகால் சவரிங்கன், மாவட்ட பிரதிநிதி உலக நாதன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அர்ஜுனன், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்செல்வி முனுசாமி, மாவட்ட பிரதிநிதி மாரி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கணேசன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் அன்பரசன், திருமங்கலம் அன்பு,
வளர்புரம் கிளை செயலாளர் தங்கமணி, எடையார்பாக்கம் முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் கவுன் சிலர் பாபு, பாலமுருகன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் சிவசக்தி, துணைத் தலைவர் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

நீலாங்கரையை அடுத்த கானத்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரையை அடுத்த கானத்தூர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ரெஜிதா (40). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரெஜிதா குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரெஜிதா தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40) டிரைவர். தனது வலையில் வீழ்த்த ஆசைப்பட்டார். அவரிடம் தாமாக சென்று பேச்சு கொடுத்தார். தன்னுடைய ஆசைக்கு இணங்க பல வழியில் இடையூறு கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ரெஜிதாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து ரமேசை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதற்கிடையில் நேற்று இரவு ரெஜிதா வீட்டிற்குள் ரமேஷ் புகுந்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். அவர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் ரெஜிதா மீது ஆசிட்டை வீசினார்.
இதில் அவரது முகம், கை, கால்கள் கருகின. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர். #Tamilnews

ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.
காஞ்சிபுரம்:
ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ந.சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் சார்-பதிவகங்கள், வாலாஜாபாத், தாமஸ் உள்பட பல்வேறு சார்- பதிகவங்களில் உள்ள நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பத்திரபதிவு துறையில் ஆன்லைன் பதிவு முறை மட்டுமே என்ற நடைமுறையை கண்டித்தும், தற்போதுள்ள முறைப்படி ஆவணப்பதிவு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. #Tamilnews

பாலேஸ்வரம் பகுதி மக்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திருமுக்கூடல் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்ற முதியோர்களை பராமரிக்கும் கிறிஸ்தவ கருணை இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற முதியோர்கள் ஏராளமானோருக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
நேற்று மாலை ஆசிரமத்துக்கு சொந்தமான வேன் ஒன்று உத்திரமேரூர் அருகே உள்ள எடையார்பாக்கம் காட்டு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேனை மடக்கிப்பிடித்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுடன் துணியால் சுற்றப்பட்ட ஆண் பிணம் இருந்தது. அருகில் திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ், திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள் ஆகியோர் பயணம் செய்து வந்ததும் தெரிந்தது.
பிணத்துடன் பயணம் செய்த அவர்கள் பயத்தில் அலறியதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சாலைவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் வேனை ஓட்டி வந்தது ராஜேஷ் என்பது தெரிந்தது. இந்த கருணை இல்லத்துக்கு சொந்தமான மற்றொரு கிளை இரும்புலியூரில் உள்ளது. அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகுமார் (வயது 70) என்பவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்கள்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்த விஜயகுமாரின் உடலை பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு காய்கறி ஏற்றிச் சென்ற வேனில் ஏற்றி வந்துள்ளார்.
அப்போது இரும்புலியூரில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜையும், அன்னம்மாளையும் பிணத்துடன் வேனில் அழைத்து வந்து இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்ததும் பாலேஸ்வரம் பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கருணை இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், தாசில்தார் அகிலா தேவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வாத்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது முதியோர்களை ஏற்றி வந்த வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருணை இல்லத்தின் மீது பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தின் பின்புறத்தில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் மிகப்பெரிய கட்டிடம் உள்ளது.
உடல்களை நீண்ட நாட்கள் அங்கு வைத்து உருக வைக்கிறார்கள். பின்னர் எலும்புகளை தனியாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொது மக்களின் இந்த குற்றச்சாட்டு போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக கருணை இல்லத்தில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

உத்திரமேரூர் அருகே காய்கறிகளுடன் ஆண் பிணத்தை எடுத்து வந்த வேனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் வேனில் வந்த 2 முதியவர்களையும் போலீசார் மீட்டனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரத்தை அடுத்த திருமுக்கூடல் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் ஒரு தனியார் கிறிஸ்தவ ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற சில முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
அந்த ஆசிரமத்திற்கு சொந்தமான வேன் ஒன்று உத்திரமேரூர் அருகே உள்ள எடையார்பாக்கம் காட்டு சாலை வழியாக வந்துகொண்டு இருந்தது. அப்போது அதிலிருந்து ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்ற அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியில் சென்றவர்கள் அந்த வேனை மடக்கிப்பிடித்தனர்.
அந்த வேனில் திண்டுக்கல்லை சேர்ந்த செழியன், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்ற 2 முதியவர்கள் இருந்தனர்.
அந்த 2 பேரும் வேனில் பிணம் ஒன்று இருப்பதாக கூறியதன் பேரில் அந்த வேனை மக்கள் சோதனை செய்தனர். அப்போது வேனில் காய்கறிகளுடன் ஒரு ஆண் பிணமும் இருந்தது. உடனே அவர்கள் அந்த வேனை சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவரை வேனில் ஏற்றிச்சென்றனர். தாம்பரம் அருகே சென்றபோது அவர் இறந்துவிட்டார். எனவே அவரது உடலை ஆசிரமத்துக்கு கொண்டுசென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அந்த வேனில் காய்கறிகளுடன் சேர்த்து அந்த உடலையும் கொண்டுசென்றதாக டிரைவர் கூறினார்.
சாலவாக்கம் போலீசார் வேன் டிரைவர் ராஜேஷ் (வயது 22) என்பவரை கைது செய்தனர். வேனில் வந்த 2 முதியவர்களையும் மீட்டனர். அவர்கள் வேனில் பிணம் இருந்ததால் பயத்தில் அலறியதாக கூறினர்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews