search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணை இல்லம்"

    • முதியோர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
    • கருணை இல்லத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள குகையநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில், உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அந்த முகாமில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருப்பதும் அவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமல் துன்புறுத்தப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து 61 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர், வாலாஜா, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், கருணை இல்லம் மூடப்படுகிறது. கருணை இல்லத்திற்கு சீல் வைக்கும்படி காட்பாடி வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் எழுத்துப்பூர்வ கடிதம் பெற்று கருணை இல்லத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த இல்லத்தில் தற்போது தங்கியிருக்கும் 8 பேர் வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்படுகிறார்கள். 

    ×