என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
    X

    செங்கல்பட்டு அருகே வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

    செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த புலிபாக்கம் காட்டுப்பகுதியில் உள்ள காந்தலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சாந்தி. மகன்கள் ராஜேஷ், விக்னேஷ்.

    பாலுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு துணையாக மனைவி சாந்தி ஆஸ்பத்திரியில் இருந்தார்.

    இதனால் விக்னேஷ் நேற்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்று தூங்கினார்.

    வேலைக்கு சென்றிருந்த ராஜேஷ் நள்ளிரவு வீட்டுக்கு வந்தபோது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து வாலிபர் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். #Tamilnews
    Next Story
    ×