என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் கோவிலில் மயங்கி விழுந்து சென்னை பெண் உயிரிழப்பு
    X

    திருப்போரூர் கோவிலில் மயங்கி விழுந்து சென்னை பெண் உயிரிழப்பு

    திருப்போரூர் கோவிலில் பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்போரூர்:

    திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று மாசிமாத கிருத்திகை விழா நடைபெற்றது. இதை யொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டை அடித்து சரவணப்பொய்கையில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். பல பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி காவடி எடுத்து மாடவீதி வலம் வந்து முருகனை தரிசித்தனர்.

    கிருத்திகையையொட்டி மாடவீதியின் பல இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் விடிய விடிய காவடி எடுத்து மாடவீதி வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த பேபி (வயது 65) என்பவர் மாசி கிருத்திகையை யொட்டி திருப்போரூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுக்க உறவினர்களுடன் வந்திருந்தார்.

    இன்று காலை அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் பேபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews

    Next Story
    ×