என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officials review"

    • இருக்கூரில் உள்ள சமையற் கூடத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு தனிநபர்கள் அன்னதானம் தயார் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
    • சுகாதாரமற்ற தண்ணீரில் உணவு தயாரிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் உள்ள சமையற் கூடத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு தனிநபர்கள் அன்னதானம் தயார் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், இங்கு அன்னதானம் என்ற பெயரில் தரமற்ற பொருட்களைக் கொண்டும், சுகாதாரமற்ற தண்ணீரில் உணவு தயாரிப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    இதன்பேரில், அன்னதான கூடத்தில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமான அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிங்காரவேல் முருகன், செல்வகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது திறந்தவெளியில் உணவு தயாரிப்பதும், தயார் செய்யப்பட்ட உணவு வகைகளை மூடி வைக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது. மேலும் உணவு சமைத்தவர்கள், சுகாதாரத்தை முறைப்படி கடைபிடிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்களை எச்சரித்து, உரிய ஆலோசனை வழங்கிய அதிகாரிகள், மேற்கொண்டு இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கினர்.

    ×