என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடன் பெறாததால் தொழிலாளிக்கு மிரட்டல்
- கடன் பெறுவதற்கு ரூ. 4 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 42). இவர் வாசனை திரவியம் விற்பனை செய்து வருகிறார்.இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 3-ந் ேததி ஒரு எண்ணில் இருந்து மெேசஜ் வந்தது. அதில் கடன் தேவைப்பட்டால் வழங்கப்படும் என இருந்தது. எனக்கு கடன் தேவைப் பட்டதால் அந்த எண்ணை தொடர்பு கொண்டேன்.
அவர்கள் எனது விவரங்களை கேட்டன ர். நான் கொடு த்தேன். பின்னர் கடன் பெறுவதற்கு ரூ. 4 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றனர். அப்போது எனக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏமாற்றி விடுவார்கள் என நினைத்து கடனை வேண்டாம் என்றேன்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து கடன் பெற்று கொள்ள வற்புறுத்தினர். நான் வேண்டாம் என்றேன். இதனால் அந்த நபர்கள் எனது வாட்ஸ்-அப் எண்ணில் தகாத வார்த்தைகளால் திட்டி வாயிஸ் மெசேஜ் அனுப்பினர். நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து அந்த நபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், மதத்தை பற்றி அவதூறாக பேசியும், மிரட்டி மெசேஜ் அனுப்பி உள்ளனர்.
எனவே அந்த மர்ம நபர்கள் யார் என கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வசாரணை நடத்தி வருகின்றனர்.