search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுக்குமாடி குடியிருப்புகளை வாழ்விட  மேம்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வு
    X

    நாமக்கல் நகராட்சி பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    அடுக்குமாடி குடியிருப்புகளை வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வு

    • திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டம் அணைப்பாளையம், நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நில வங்கி திட்டப்பகுதி 3, நில வங்கி திட்டப்பகுதி 4, நாமக்கல் திருச்சி ரோடு ரெட்டிப்பட்டி நாகராஜபுரம், குமாரபாளையம் வட்டம் ஆலாம்பாளையம் அன்னை சத்யா நகர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1,856 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், ராசிபுரம் வட்டத்தில் அணைப்பாளையம், நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நிலவங்கி திட்டம் 3 பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக ளையும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கொண்டிசெட்டிபட்டி திட்டப்பகுதியில் வீடுஒதுக்கீடு பெற்று குடியிருந்து வரும் பயனாளிகளிடம் குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை சீராக பெறப்படுகின்றதா என்றும் மேலும் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்து குடியிருப்புகளிலும் குடியிருப்போர் சங்கம் அமைத்து அதனை பதிவு செய்திட வேண்டும், அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் வாரியத்தின் மூலம் சீர் செய்து தரப்படும் என்று வாரிய வீடுகளில் குடியிருப்போரிடம் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளின் தற்போதைய நிலை, குடியிருப்பு ஒதுக்கீடுகள், பயனாளிகள் தேர்வு ஆகியவை குறித்து கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் முன்னிலையில் துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளில் ஆர்.டி.ஓ.க்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார், நிர்வாகப் பொறியாளர் தனசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×