search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில்  மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி
    X

    விழுப்புரத்தில் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி

    • விழுப்புரத்தில் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் மாணவ, மாணவியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை இணைந்து, 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவு ள்ளதையொட்டி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திருமதி.மு.பரமேஸ்வரி தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார்.

    பேரணியில் மாணவ, மாணவியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்னை, மாமல்லபுரத்தில் ஜீலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகின்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டியின் சிறப்பு குறித்த விளம்பர பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வண்ணம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவாக மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தை வந்தடைந்தன.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கிரு ஷணப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர்.வேல்முருகன், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர்காளிதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்பெருமாள், விழுப்புரம் வட்டாட்சியர்ஆ னந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×