search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலத்தில்   பெண்கள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
    X

    தாரமங்கலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்

    • பெண்கள் சேவை மைய அலுவலர்களும் இணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகள் முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்க வேண்டுமெனவும் ஆலோசிக்கபட்டது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய அலுவலர்களும் இணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகள் முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்க வேண்டுமெனவும், இத்தகைய பாதிப்பில் உள்ளவர்களை கண்டறிந்து மீட்பது குறித்தும் ஆலோசிக்கபட்டது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி, தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் கிருஷ்ணவேணி, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் திவ்யா, சமூக ஆர்வலர் அலமேலு, சட்ட தன்னார்வலர் மஞ்சுளா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×