என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இந்து முன்னணி முற்றுகை போராட்டம்
  X

  இந்து முன்னணி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

  இந்து முன்னணி முற்றுகை போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த நிலையில் இன்று இந்து முன்னணியினர் ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
  • பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே சோழன் நகரில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சனையை சரி செய்வதற்காக மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இந்தப் பள்ளம் உடனடியாக மூடவில்லை என்றும், இதனால் விபத்துக்கள் நடைபெறுகிறது என்றும் கூறி இந்து முன்னணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

  இந்த நிலையில் இன்று இந்து முன்னணியினர் ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அலுவலக நுழைவாயில் வழியாக நுழைய முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

  இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை எடுத்து திரும்பி வந்த இந்து முன்னணியினர் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. என் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 45-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Next Story
  ×