search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75-வது சுதந்திர தினவிழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    75-வது சுதந்திர தினவிழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • 75-வது சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
    • 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    75-வது சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 9.05 மணியளவில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    சுதந்திர தினவிழாவையொட்டி சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா, துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ரோந்து, வாகன சோதனை, கடைகள், லாட்ஜ்கள், ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை உள்ளிட்டவைகள் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள், அவரது உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன.

    அதேேபால் சுற்றுலா தலங்களான ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வழிபாட்டு தலங்களை போலீசார் 25 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம் மாநகரில் உள்ள விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்டவைகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அங்கு வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×