என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாளை சிறையில் தண்டனை கைதியாக இருந்தார்- லஞ்ச வழக்கில் கைதான தாசில்தார் திடீர் சாவு
  X

  பாளை சிறையில் தண்டனை கைதியாக இருந்தார்- லஞ்ச வழக்கில் கைதான தாசில்தார் 'திடீர்' சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அருணாச்சலம் தாசில்தாராக பணியாற்றிய போது லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
  • ஜெயில் வார்டன்கள் அருணாச்சலத்தை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  நெல்லை:

  தென்காசியை அடுத்த மேலகரம் என்.ஜி.ஓ. காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 68). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

  லஞ்ச வழக்கு

  வி.கே.புதூர் தாலுகா அலுவல கத்தில் தாசில்தாராக பணியாற்றிய போது லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. நெல்லை நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மேல்முறையீடு செய்திருந்தார். அதிலும் அவர் லஞ்சம் பெற்றது நிருபிக்கப்பட்டதால் அவர் மீதான தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

  நெஞ்சு வலியால் சாவு

  இதன் காரணமாக கடந்த மாதம் அருணாச்சலம் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரனெ உடல்நலக்குறைவு ஏற்படவே, ஜெயில் வார்டன்கள் அவரை நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி அதிகமாகி உயிரிழந்தார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×