search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வீட்டின் மாடியில் இருந்து   தவறி விழுந்த தொழிலாளி பலி
    X

    புதிய வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

    • கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • கால் வழுக்கி நிலை தடுமாறி மருதவேல் மேல் தளத்தில் இருந்து தரைப்பகுதியில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ராசிபாளையம் இந்திரா நகர் பகுதி சேர்ந்தவர் மருதவேல் (வயது 50). இவர் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (42). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு கலைவாணி என்ற மகளும், விக்னேஷ், சங்கர் என்ற மகன்களும் உள்ளனர் .

    மருதவேல் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். மோக–னூர்- நாமக்கல் சாலையில் உள்ள வேல் நகர் பகுதியில் முத்துசாமி என்பவர் புது வீடு கட்டி வருகிறார் . இந்த கட்டிடத்தை ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் கட்டி வருகிறது. அதன் மேலாளர் திலீப்குமார் என்பவரிடம் 100 ரூபாய் தினக்கூலிக்கு மருதவேல் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முத்து–சாமி கட்டி வரும் புதிய வீட்டின் மேல் தளத்தின் சுற்றுச்சுவருக்கு மருதவேல் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது கால் வழுக்கி நிலை தடுமாறி மருதவேல் மேல் தளத்தில் இருந்து தரைப்பகுதியில் கீழே விழுந்தார் .இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மருதவேலை அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி மருதவேல் உயிரிழந்தார்.

    இது குறித்து மருதவேல் மனைவி ராஜேஸ்வரி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×