search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கல்
    X

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் விவசாயிகளுக்கு உரம் வழங்கினார்.

    குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கல்

    • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2315 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் முழு மானியத்தில் உரம் பெற்று பயன்பெறலாம்.
    • ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது.

    திருத்துறைபூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில்கடந்த ஆண்டை விட இவ்வருடம் கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு ள்ளது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 3955 ஏக்கர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2315 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் குறுவை தொகுப்புதிட்டத்தில் முழு மானியத்தில் உரம் பெற்று பயன்பெறலாம்.

    ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தேவை யான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுவதால் விவசாயிகள் உடனடியாக தங்களுக்கு வந்த ஓடிபி நம்பரை தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கிகளில் தெரிவித்து உரத்தினை எடுத்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலதாமதம் இன்றி உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருந்து உரத்தினை எடுத்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×