search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழுதிக்குட்டையில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம்
    X

    முகாமை ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

    புழுதிக்குட்டையில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம்

    • சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வெள்ளிக்கவுண்டனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் வரவேற்றார்.

    புழுதிக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், துணைத்தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    டாக்டர்கள் பேரின்பம், வெற்றிவேல், ராகுல், ராஜ்குமார், அபிராமி, சித்த மருத்துவர் இலக்குமணன் ஆகியோர் கொண்ட மருத்துவகுழுவினர், சிசிச்சை அளித்தனர். இம்மு காமில், குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டுபிடிப்பு, ஸ்கேன் பரிசோதனை, சித்த மருத்துவம், கண், தோல் மற்றும் பல் மருத்துவ சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

    அங்கன்வாடி பணியா ளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களின் காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 54 கர்ப்பிணி பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. 56 பேருக்கு இருதய ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடு களை சமுதாய சுகாதார செவிலியர் ராணி, சுகா தார ஆய்வாளர்கள் செல்வம், செல்வபாபு, கோபி, ஆனந்த், கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பாற்வையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    Next Story
    ×