search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உர தட்டுப்பாடு
    X

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உர தட்டுப்பாடு

    • சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • உரம் தெளிப்பதற்கு விவசாயிகள் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, அணுகி விவசாயிகள் கேட்கும் பொழுது, உரம் வரவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சிறு குறு விவசாயிகளுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ், இலவச உரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட நிலையிலும், தற்போதைய இயற்கை சூழல், மேலடுக்கு சுழற்சியில் மாற்றம், காரணமாக மழை பொழிந்து வருகிறது. இதனை சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தங்களது நிலத்தை நீர்பாய்ச்சி, உழுது, நிலத்தைப் பண்படுத்தி, நாற்றங்கால் அமைத்து, நாற்று நடும் தருவாயில், அடி உரம், மற்றும் மேலுரம், நாற்றங்கால் சிறப்பாக அமைய உரம் தெளிப்பதற்கு விவசாயிகள் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, அணுகி விவசாயிகள் கேட்கும் பொழுது, உரம் வரவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றனர்.

    அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில், மெத்தனம் காட்டுவதாக, விவசாயிகள் தங்களுடைய கவலைகளையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    எனவே நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்க கூடிய உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×