search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர விவசாயிகள் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும் -வேளாண்மை துறை அதிகாரி வேண்டுகோள்
    X

    பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர விவசாயிகள் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும் -வேளாண்மை துறை அதிகாரி வேண்டுகோள்

    • துவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியைப்பொருத்து விவசாயிகளுக்கு 11தவணை வரை தொகைகள்வரப் பெற்றுள்ளது.
    • விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

    உடன்குடி:

    திருச்செந்தூர், உடன்குடி வட்டார விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ 6000 க்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சேருவதற்கு விவசாயிகளுக்கு வேளாண்மைஉதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் அழைப்பு விடுப்பு உள்ளார், அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் உடன்குடி வட்டாரத்தில் பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வேளாண்மை இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியைப்பொருத்து விவசாயிகளுக்கு 11தவணை வரை தொகைகள்வரப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லதுவிவசாயியை தெரிந்து கொள்ளுங்கள், இதனால் விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.இதற்கு அருகாமையிலுள்ள இசேவை மையத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி இ.கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்களதுஆதார் எண்ணுடன்கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார்எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம். திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களதுஆதார் விவரங்களை உடனடியாக பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில்பதிவு செய்து தொடர் தவணைகள் பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    Next Story
    ×