search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    பூதலூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள முன்பட்ட குறுவை நெற்பயிர்கள்.

    கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

    • பல கிராமங்களில் முன்பட்ட குறுவை நெற்பயிற்கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியாக பதிவு செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டாரத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி கல்லணை தொடங்கி ஆழ்துளை கிணறு வசதி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் மட்டும் ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள முன்பட்ட குறுவை பயிர் சில கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் முன் பட்ட குறுவை நெற்பயிற் கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    அறுவடை தொடங்கி யுள்ள சில கிராமங்களிலும், தொடங்க உள்ள கிராமங்களிலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்யவில்லை. அறுவடை தொடங்கியுள்ள கிராம விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை அணுகிய போது உடனடியாக திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியில் வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்து அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடை நடைபெறுவதற்கு முன்னதாகவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்த பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×