search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம், பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம், பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை

    • சேர்வைகாரன்மடம் கிராமத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளில் கனரக வாகனம் வந்து செல்வதால் கிராமப்புற சாலைகள் ரோடு சேதம் அடைந்து வருகிறது.
    • எனவே அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் காமராஜர் நகர் நுழைவுப் பகுதிகளில் “தடுப்பு ஆர்ச் “ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி, புதுக்கோட்டை, சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப் பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகளவு நீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சேர்வைகாரன் மடம் கிராமத்தில் உள்ள காம ராஜர்நகர் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் நாள்தோறும் கிராமப்புற ரோடுககளில் வந்து செல்வதால் இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கனரக வாகனம் வந்து செல்வதால் கிராமப்புற சாலைகள் ரோடு சேதம் அடைந்து வருகிறது. இதனால் ரோடுகள் அடிக்கடி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கிராமப்புற சாலைகளில் கனரக வாகனம் செல்ல அனுமதியில்லை என விதிமுறைகள் இருந்தும் இந்த விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு வருகிறது. எனவே அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் காமராஜர்நகர் நுழைவுப் பகுதிகளில் "தடுப்பு ஆர்ச் " அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது பெருந்தலை வர் மக்கள் கட்சி பொருளாளர் மில்லை தேவராஜ், நிர்வாகிகள் சரவணன், சண்முகவேல், சரவணக்குமார், கதிர் ெஜயக்குமார், ஞானப்பூஅம்மாள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×