என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் கவியரசு (வயது 28).
இவருக்கு சொந்தமான லாரி ஒன்று உள்ளது. இதனை லக்காபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த ஒரு வருடமாக ஓட்டி வந்துள்ளார்.
இதற்காக இவருக்கு 4 மாதமாக சம்பளம் கொடுக்க வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீரப்பன் சத்திரத்தில் லாரி பட்டறையில் பழுது பார்க்க லாரி விடப்பட்டது.
லாரியை எடுக்க சென்ற கவியரசு அங்கு லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கவியரசு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காணாமல்போன லாரி இன்று அதிகாலை லக்காபுரம் பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லக்காபுரம் சென்ற போலீசார் லாரியை கைப்பற்றினர். இது குறித்து விசாரணை நடத்திய போது சம்பளம் கொடுக்காததால் லாரியை சண்முகம் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சண்முகத்தை வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் தமிழக அரசை விமர்சித்து யார் பேசினாலும் அவர்களது நாக்கை அறுப்பேன் என பேசி இருக்கிறார். அவரது குடும்பத்தில் இருப்பவர்களே அவரது நாக்கை கடித்து துப்பிவிடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் ஓடை, குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாருவதாக கூறி இந்த அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம். முறையாக தூர்வாரி இருந்தால் இந்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கும்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பை வரவேற்கிறேன். நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய பெண்கள், ஆண்கள் செல்லும் போது ஏன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கூடாது? ரபேல் விமானம் வாங்க காங்கிரஸ் அரசு இருந்த போது ரூ.526 கோடிக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் அதை தற்போதைய மோடி அரசு ரூ.1200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. எத்தனை கோடிக்கு ஊழல்? என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும். கருணாஸ் மீதான நடவடிக்கை நியாயம் தான். அதே போல் எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமரன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் நல்லசாமி, மகிளா காங்கிரஸ் சித்ரா விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். #Congress #EVKSElangovan #Sabarimala
பெருந்துறை:
முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டர்களின் மனதில் மட்டுமல்ல தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து வருபவர் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆவார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றை சொல்லில் சொல்ல விரும்புகிறேன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.பி.க்கள் அனைவரும் மன வருத்தத்தில் உள்ளனர்.
தங்களின் கருத்துகளை கேட்க யாரும் முன் வரவில்லையே என்ற மன வேதனையில் உள்ளனர்.
மன வேதனையில் உள்ள அவர்களை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். மன வருத்தத்தை போக்க வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தலைமை மதிப்பளிக்க வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வரவழைத்து முதல்வரும், துணை முதல்வரும் பேச வேண்டும்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போது தொண்டர்கள் மனது நோகும்படி பேசி வருகிறார்கள். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் அமைச்சர்கள் நாகரீகத்துடன் பேச வேண்டும்.
மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசும் போது கூட யார் மனதையும் புண்படாமல் கொள்கையை மனதில் வைத்து பேசுவார். அப்படி யாரும் பேச கூடாது என்று வலியுறுத்தி வந்தார்.
அதன் படி இப்போது கூட்டத்தில் பேசும் அமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும். நாகரீகத்துடன் பேச வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.
அமைச்சர்கள் புள்ளி விவரத்துடன் பேசும் காலம் போய் புல்லரிக்கும் வகையில் பேசும் நிலை வந்து விட்டது. அமைச்சர்கள் பேச்சுக்கும், கருணாஸ் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது. ஜெயலலிதாவின் ஒழுக்க சிந்தனையுடன் அமைச்சர்கள் பேச கற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேசினார். #thoppuvenkatachalammla
கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு 1750 கனஅடி நீர் வந்த வண்ணம் இருந்தது. இன்று அது உயர்ந்து வினாடிக்கு அணைக்கு 5172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 99.01 அடியாக இருந்தது.
ஏற்கெனவே இந்தாண்டு பவானிசாகர் அணை 2 தடவை நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் அணை குழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. இது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளதால் இந்தாண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டுக்கும் விவசாயத்துக்கு பஞ்சம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் கோனேரிபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் லோகேஸ் வரன். இவர் ஈரோடு நாடார் மேட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர்.
இந்த நிலையில் மாணவியை அந்த வாலிபர் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றுவிட்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் லோகேஸ்வரனையும், அந்த மாணவியையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடத்தில் பதுங்கி இருந்த லோகேஸ்வரனையும், அந்த மாணவியையும் போலீசார் மீட்டு வந்தனர். தொடர்ந்து விசாரணை நடந்தது.
பின்னர் திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி சென்றதாக லோகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
ஈரோடு:
ஈரோடு செம்படாம்பாளையம் நசியனூர் வெள்ளக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக பணியாளர்கள் இன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. இதில் சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த செல்வமும் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து செல்வம் மீது விழுந்து அவரை அமுக்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். இடிபாட்டுக்குள் சிக்கி கிடந்த செல்வம் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் யசோதா, சாஜிதாபானு ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக தொடர்ந்து மழை கொட்டியது. ஈரோடு நகரை தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
புஞ்சை புளியம்பட்டியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இடியும்-மின்னலும் அதிகமாக இருந்தது. இதில் புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் மீது ‘இடி’ விழுந்தது.
இதில் அந்த செல்போன் டவர் திடீரென தீ பிடித்து எரிந்தது. அதிகாலை 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மழையும் பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தக்க சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மண்டல தலைவர் பிரகலாதன் தலைமை தாங்கினார்.
பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தி.க. மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
வெள்ளோடு பகுதியில் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. வெள்ளோடு அருகே ஊஞ்சலூர் பிரிவு அருகே 50 மீட்டர் தொலைவில் வாய்க்காலில் ஒரு பெண்ணின் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது.
இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
வெள்ளோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த பெண்ணின் பிணத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயது இருக்கும். கையில் பச்சை குத்தி உள்ளார். மஞ்சள் கலர் ஜாக்கெட்டும், பிரவுன் கலர் பாவாடையும் அணிந்துள்ளார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரால் இழுத்து செல்லப்பட்டு இறந்தாரா? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார்.
திடீரென அவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி லோகநாதனின் வீட்டருகே வசிக்கும் விவசாயியான ஈஸ்வரமூர்த்தி (வயது 57) என்பவர் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது லோகநாதன் அங்கு வந்தார். அவர் ஈஸ்வரமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டார். ‘‘உன்னால்தான் எனது வேலை போனது. இப்போது வருமானம் இல்லாமல் இருக்கிறேன்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
பின்னர் ஈஸ்வரமூர்த்தியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 500 பணத்தை பறித்தார். மேலும் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஈஸ்வரமூர்த்தியை தாக்கினார்.
இது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாரதி பிரபா உத்தரவிட்டார். இதையடுத்து லோகநாதன் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியக்காட்டுகாலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). தொழிலாளி.
இவரும், இவரது மனைவி வேதவல்லி (26), மகன்கள் அரீஷ் (4), பாகுபலி (2), அதே பகுதியை சேர்ந்த நீலாம்பரி ஆகியோரும் ஒரே மொபட்டில் சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.
மொபட்டில் இருந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வேதவல்லியும், பாகு பலியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விஜய், அரீஷ், நீலாம்பரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் அரீஷ் பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சூரியக்காட்டுகாலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). தொழிலாளி.
இவரும், இவரது மனைவி வேதவல்லி (26), மகன்கள் அரீஷ் (4), பாகுபலி (2), அதே பகுதியை சேர்ந்த நீலாம்பரி ஆகியோரும் ஒரே மொபட்டில் சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.
மொபட்டில் இருந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வேதவல்லியும், பாகுபலியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விஜய், அரீஷ், நீலாம்பரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் அரீஷ் பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






