என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பு பகுதியில் மழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நீர்பிடிப்பு பகுதியில் மழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று அணைக்கு 1750 கனஅடி நீர் வந்த வண்ணம் இருந்தது. இன்று அது உயர்ந்து வினாடிக்கு அணைக்கு 5172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 99.01 அடியாக இருந்தது.

    ஏற்கெனவே இந்தாண்டு பவானிசாகர் அணை 2 தடவை நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் அணை குழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. இது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளதால் இந்தாண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டுக்கும் விவசாயத்துக்கு பஞ்சம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×