என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே சம்பளம் தராததால் லாரியை கடத்திய வாலிபர் கைது
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் கவியரசு (வயது 28).
இவருக்கு சொந்தமான லாரி ஒன்று உள்ளது. இதனை லக்காபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த ஒரு வருடமாக ஓட்டி வந்துள்ளார்.
இதற்காக இவருக்கு 4 மாதமாக சம்பளம் கொடுக்க வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீரப்பன் சத்திரத்தில் லாரி பட்டறையில் பழுது பார்க்க லாரி விடப்பட்டது.
லாரியை எடுக்க சென்ற கவியரசு அங்கு லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கவியரசு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காணாமல்போன லாரி இன்று அதிகாலை லக்காபுரம் பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லக்காபுரம் சென்ற போலீசார் லாரியை கைப்பற்றினர். இது குறித்து விசாரணை நடத்திய போது சம்பளம் கொடுக்காததால் லாரியை சண்முகம் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சண்முகத்தை வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்தனர்.