என் மலர்
செய்திகள்

திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோட்டில் திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் கோனேரிபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் லோகேஸ் வரன். இவர் ஈரோடு நாடார் மேட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர்.
இந்த நிலையில் மாணவியை அந்த வாலிபர் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றுவிட்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் லோகேஸ்வரனையும், அந்த மாணவியையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடத்தில் பதுங்கி இருந்த லோகேஸ்வரனையும், அந்த மாணவியையும் போலீசார் மீட்டு வந்தனர். தொடர்ந்து விசாரணை நடந்தது.
பின்னர் திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி சென்றதாக லோகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

Next Story