search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்வெளிக்கு செல்லும் போது சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது?- இளங்கோவன்
    X

    விண்வெளிக்கு செல்லும் போது சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது?- இளங்கோவன்

    நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய பெண்கள், ஆண்கள் செல்லும் போது ஏன் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது? என்று இளங்கோவன் கேள்வியெழுப்பியுள்ளார். #Congress #EVKSElangovan #Sabarimala
    கோபி:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் தமிழக அரசை விமர்சித்து யார் பேசினாலும் அவர்களது நாக்கை அறுப்பேன் என பேசி இருக்கிறார். அவரது குடும்பத்தில் இருப்பவர்களே அவரது நாக்கை கடித்து துப்பிவிடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் ஓடை, குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாருவதாக கூறி இந்த அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம். முறையாக தூர்வாரி இருந்தால் இந்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கும்.

    இலங்கை தமிழர்களுக்கு மத்தியில் ஆட்சி செய்த மன்மோகன் சிங் அரசு தான் நிறைய நன்மைகள் செய்தது. இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்தது காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் தான். தமிழக அரசு அமைச்சர்களை வைத்து ஆங்காங்கே பொதுக்கூட்டம் போட்டு இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க. தான் இடைஞ்சல்கள் செய்ததாக பொய் பிரசாரத்தை செய்து வருகிறது. இது வரும் தேர்தலில் எடுபடாது.


    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என தம்பிதுரை கூறி உள்ளார். அவர் சொன்னதை போலவே அ.தி.மு.க. தனித்து நிற்க வேண்டும். அப்போது தான் மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கும்? என தெரிய வரும்.

    சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பை வரவேற்கிறேன். நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய பெண்கள், ஆண்கள் செல்லும் போது ஏன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கூடாது? ரபேல் விமானம் வாங்க காங்கிரஸ் அரசு இருந்த போது ரூ.526 கோடிக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் அதை தற்போதைய மோடி அரசு ரூ.1200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. எத்தனை கோடிக்கு ஊழல்? என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும். கருணாஸ் மீதான நடவடிக்கை நியாயம் தான். அதே போல் எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமரன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் நல்லசாமி, மகிளா காங்கிரஸ் சித்ரா விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். #Congress #EVKSElangovan #Sabarimala 
    Next Story
    ×