என் மலர்
நீங்கள் தேடியது "Women deadbody"
வெள்ளோடு அருகே வாய்க்காலில் மிதந்து வந்த பெண் பிணம் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரச்சலூர்:
வெள்ளோடு பகுதியில் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. வெள்ளோடு அருகே ஊஞ்சலூர் பிரிவு அருகே 50 மீட்டர் தொலைவில் வாய்க்காலில் ஒரு பெண்ணின் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது.
இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
வெள்ளோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த பெண்ணின் பிணத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயது இருக்கும். கையில் பச்சை குத்தி உள்ளார். மஞ்சள் கலர் ஜாக்கெட்டும், பிரவுன் கலர் பாவாடையும் அணிந்துள்ளார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரால் இழுத்து செல்லப்பட்டு இறந்தாரா? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews