என் மலர்
ஈரோடு
கோபி:
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.-
தி.மு.க. ஆட்சியின் போது எந்த திட்டமும் உருப்படியாக நடக்கவில்லை. 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் வீணானது தான் மிச்சம். ஆனால் முன்னாள் முதல்வர் ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.
இப்படி மக்கள் அரசாக திகளும் இந்த அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று எங்கும் மின்தடையே கிடையாது. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது.
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அது மீண்டும் தொடர வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #opanneerselvam #mkstalin
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சித் தலைவி அம்மா ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.
மக்களுக்காக பாடுபடும் அ.தி.மு.க. அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று எங்கும் மின்தடையே கிடையாது. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam #MKStalin
ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. பணம் கொடுத்து வெற்றி பெற அரசியல் கட்சியினர் துடிக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு சாட்சி துரைமுருகன் வீடு-குடோன்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
காங்கிரஸ் கட்சியினர் ‘‘நீட்’’ தேர்வுக்கு விலக்கு அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் சட்டப்படி அது நடக்காது. விலக்கு அளிக்கவும் முடியாது பொய்யான வாக்குறுதி ஆகும். எப்படியோ ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.
கமல்ஹாசனுக்கு மக்கள் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் கிடையாது. அது ஏற்படவும் செய்யாது. கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் அவ்வளவுதான். அவரால் அரசியலில் சாதிக்க முடியாது. அவர் சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறார். ஆனால் கமலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடையாது.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோபி ஒன்றியம் பொலவக்காளிபாளையம், பெரியார் நகர், இந்திரா நகர், கடுக்காம்பாளையம் பகுதிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவருடன் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

அதை கவனிக்காத அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டுகிறேன் என்று அறிவித்தார். அதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, எங்கள் குழந்தை பெண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை என்று கூறினார்கள். அருகில் இருந்தவர்களும் அமைச்சரிடம் விவரத்தை கூற, உடனடியாக சமாளித்துக்கொண்ட அமைச்சர், பிரசார வேனை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருடன் வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர். அமைச்சர் குழந்தையை கையில் வாங்கி, ராமச்சந்திரன் என்று மீண்டும் பெயர் சூட்டினார்.
ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியதும், பின்னர் ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டி குழந்தையை வாழ்த்தியதும் ருசிகரமான சம்பவமாக அமைந்தது. #LokSabhaElections2019 #MinisterSengottaiyan
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சரவணன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் கொங்கு மணிமாறன் ஆதரித்து நடிகர் சரவணன் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார்.
நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நானும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கொங்கு நாட்டு பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
முதல்வர் மெகா கூட்டணியை அமைத்து இருக்கிறார். இது அவரது புத்திசாலி தனத்தை காட்டுகிறது. ஆட்சி திறமையை வெளிப்படுத்துகிறது. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை கண்டு தி.மு.க. பயப்படுகிறது.
பெரும்பாலான தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலினை பிடிப்பதில்லை. எனவே நாம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடுபட்டு வருகிறார்.
இந்த ஆட்சி இன்னும் சில மாதங்கள் தான்... சில நாட்கள் தான்... என தப்பு கணக்கு போட்டார்கள். அந்த தப்பு கணக்கு இப்போது என்னாச்சி? அ.தி.மு.க. ஆட்சியை எவராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.
இவ்வாறு நடிகர் சரவணன் கூறினார். #ActorSaravanan
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பவானி மெயின் ரோடு பழைய காமதேனு கல்யாண மண்டபம் எதிர்ப்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
இறந்தவர் சிவப்பு ஊதா கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், ஊதா பிரவுன் கலர் கட்டம் போட்ட லூங்கியும் அணித்திருந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது25).
அருள்குமார் சம்பவத்தன்று கமலா நகர் பழைய மாட்டுச்சந்தை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பத்ம நாதன் (28), விஜயன் (25) கிஷோர் (29) ஆகியோர் அருள்குமாரிடம் 500 பணம் கேட்டு மிரட்டினர்.
மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் கை கால்களை முறித்து ஆற்றில் வீசி விடுவோம் என்றும் மிரட்டினார்களாம்.
இதுகுறித்து அருள்குமார் ஈரோடு கருங்கல் பாளையம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனசுந்தரம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பல்வேறு இடங்களில் கார், வேன், ஆட்டோ உள்பட வாகனங்களில் வந்த நபர்களிடமிருந்து முறையான ஆவணங்கள் இல்லாத பல லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெருந்துறை அடுத்த குன்னத்தூர், தாளப்பதி, பாலாஜி நகர் பகுதியில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வேனில் வந்த கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த அசார் (22) என்பவரிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ரூ.2 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்கான ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தேங்காய் வியாபாரியான அவர் சாம்ராஜ் நகரில் இருந்து ஊத்துக் குளிக்கு தேங்காய் லோடு கொண்டு சென்று விட்டு அதற்கான பணத்தை வாங்கி கொண்டு திரும்ப ஊருக்கு செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து பறிமுதல் செயய்ப்பட்ட பணத்தை பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் அவர்கள் ஒப்படைத்தனர். #tamilnews
அத்தாணி அருகே உள்ள கருவல்வாடி புதூர் முத்தாயி தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 56) விவசாயி.
இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் திரும்பிவரவில்லை.
இதனால் அவரது மகன் கவுரி சங்கர் போன் செய்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் அவரை தேடி தோட்டத்துக்கு உறவினர்கள் சென்றனர்.
அப்போது அங்கு பக்கத்து தோட்டத்தை சுற்றி மின்வேலி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பொன்னுசாமி கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
மின் வேலியை அவர் தொட்டதால் மின்சாரம் தாக்கி பொன்னுசாமி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பக்கத்து தோட்டத்துகாரர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மின்சாரம் தாக்கி பலியான பொன்னுசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் பறக்கும் படையா..? பறிக்கும் படையா?

நம் நாடு எத்தனையோ தேர்தல்களை சந்தித்து உள்ளது. ஆனால் நாம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுதான் உண்மை. தி.மு.க.வுக்கு மாற்று.. அ.தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க... பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க இப்படிதானே இருக்கிறது? இதிலிருந்து ஒரு மாற்று ஏற்படதான் “நாம் தமிழர்” என்ற புதிய இயக்கத்தை... புதிய அரசியல் பாதையை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இந்த இயக்கம் புரட்சிகர அரசியல் பாதை. அடிமைகளாக இருக்கும் மக்களின் அரசியல் பாதை... நமது அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான வாழ்க்கைபாதை வாருங்கள். இந்த பாதையில் பயணிப்போம்.. இழந்த உரிமையை மீட்டெடுப்போம். நம்மை ஆள இவர்கள் யார்?
ஆட்சியாளர்கள் உங்களுக்கு கொடுக்கும் பணம் உங்கள் வறுமையை போக்கி விடுமா? பொங்கலுக்கு அந்த பக்கம் ரேசனில் ரூ.1000 கொடுக்கிறார்கள். இந்த பக்கம் டாஸ்மாக் கடையில் அதை வாங்கி கொள்கிறார்கள்.
இப்போது அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளை நட்டு வைக்கிறார்கள். அவர்களை பார்த்து நான் கேட்கிறேன். தமிழகம் என்ன உங்கள் குடும்ப சொத்தா? எங்கள் பாட்டன்.. முப்பாட்டான் எல்லாம் உங்களிடம் இதையா கேட்டார்கள்? தலாய்லாமா தனி நாடு கேட்டால் ஆதரிக்கும் மத்திய அரசு.. பாகிஸ்தானை பிரித்து வங்காள தேசம் உருவாக்கிய இந்திய அரசு பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்திய அரசு நாம் தனி ஈழம் கேட்டால் மட்டும் எதிர்ப்பது என்னங்க நியாயம்? 50 ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்து எதுவும் செய்யாத காங்கிரஸ் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறது? கடந்த 5 ஆண்டாக எதுவும் செய்யாத மோடி மீண்டும் பிரதமரானால் வரும் 5 ஆண்டுகளில் நாடே இருக்காது முடித்து விடுவார்.
நான் உங்களிடம் ஓட்டு கேட்கப் போவதில்லை. எனக்கு ஓட்டுப்போட்டால் போடுங்கள்.. இல்லாவிட்டால் போங்கள்.. ஆனால் நாட்டுக்காக பேராட வேண்டியது எனது கடமை. அந்த கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டின் மீது எனக்கு பேரன்பு உள்ளது.
இவ்வாறு சீமான் பேசினார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #Seeman
ஈரோடு:
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுலால் (வயது 50). பாபுலால் ஈரோடு கருங்கல்பாளையம் கந்தசாமி இரண்டாவது வீதியில் கடந்த இரண்டு வருடமாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். பாபுலால் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாபுலால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ஒரு வீட்டின் கதவை தட்டினர் ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாபுலால் மல்லார்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து ராஜஸ்தானில் உள்ள பாபுலால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி உமாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, முருகசாமி அடங்கிய குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது லாரியில் இருந்த மாரிமுத்து என்பவரிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்ததில் அவர் தக்காளி பழம் வாங்க செல்வதாக கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் தாசில்தார் முன்னிலையில் ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.






