என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே தக்காளி பழம் வாங்க சென்ற வியாபாரியிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்
    X

    கோபி அருகே தக்காளி பழம் வாங்க சென்ற வியாபாரியிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்

    கோபி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தக்காளி பழம் வாங்க சென்ற வியாபாரியிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோபி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி உமாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, முருகசாமி அடங்கிய குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது லாரியில் இருந்த மாரிமுத்து என்பவரிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்ததில் அவர் தக்காளி பழம் வாங்க செல்வதாக கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் தாசில்தார் முன்னிலையில் ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×