என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி மரணம்
    X

    ஆப்பக்கூடல் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி மரணம்

    ஆப்பக்கூடல் அருகே பக்கத்து தோட்டத்தை சுற்றி இருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள கருவல்வாடி புதூர் முத்தாயி தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 56) விவசாயி.

    இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் திரும்பிவரவில்லை.

    இதனால் அவரது மகன் கவுரி சங்கர் போன் செய்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் அவரை தேடி தோட்டத்துக்கு உறவினர்கள் சென்றனர்.

    அப்போது அங்கு பக்கத்து தோட்டத்தை சுற்றி மின்வேலி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பொன்னுசாமி கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    மின் வேலியை அவர் தொட்டதால் மின்சாரம் தாக்கி பொன்னுசாமி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பக்கத்து தோட்டத்துகாரர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மின்சாரம் தாக்கி பலியான பொன்னுசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×