search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினைகள் விரைவில் சரி செய்யப்படும் - கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற போது எடுத்த படம். அருகில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி.

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினைகள் விரைவில் சரி செய்யப்படும் - கனிமொழி எம்.பி. பேச்சு

    • காடல்குடி, சின்னூர் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை கனிமொழி எம்.பி. வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட காடல்குடி, சின்னூர், என்.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலாபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கி னார். அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்க ளை பெற்றார்.

    மேலும், 13 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் திட்டம் மூலம் 50 பயனாளி களுக்கு ரூ.9.30 லட்சம் குழு கடன், 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் பேசுகை யில், விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை களை விரைவில் சரி செய்து தரப்படும். சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களது மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராம கிருஷ்ணன், புதூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னகண்ணு, புதூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், மத்திய ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்தி குளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், புதூர் தி.மு.க. நகர செயலாளர் மருதுபாண்டி, முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், பொதுக்குழு உறுப்பி னர் ராஜாகண்ணு, வெற்றி வேலன், கந்தசாமி உரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி விஜய், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைத்தள அணி ஒருங்கி ணைப்பாளர் கரண் குமார், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×