search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில்  தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம்
    X

    மாநில பேச்சாளர் ராஜன் பேசியகாட்சி. அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளார்.

    ஆலங்குளத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம்

    • சந்தனமாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலர் நெல்சன் தலைமை தாங்கினார்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், சாதனைகளை விளக்கிப் பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. சந்தனமாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலர் நெல்சன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் செல்லத்துரை, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல் ராஜா, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாநில பேச்சாளர்கள் ராஜன், நெல்லை ரவி ஆகியோர் சாதனைகளை விளக்கிப் பேசினர்.

    கூட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் வரவேற்றார். நகர பொருளாளர் சுதந்திரராஜன் தொகுத்து வழங்கினார். வார்டு செயலர் அப்பாதுரை நன்றி கூறினார்.

    Next Story
    ×