search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதித்த தோட்டக்கலை பயிர்களின் விவரங்கள் கணக்கெடுக்கப்படும்
    X

    பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களை தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வெள்ளத்தால் பாதித்த தோட்டக்கலை பயிர்களின் விவரங்கள் கணக்கெடுக்கப்படும்

    • தோட்டக்கலை பயிர்களான வாழை, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.
    • வெள்ளப்பெருக்கு குறைந்த உடன் பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து விடும்.

    தஞ்சாவூர்:

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் நீரில் மூழ்கி பாதிப்பு அடைஅடைந்துள்ளன.

    இந்த நிலையில் தஞ்சை அடுத்த கோவிந்தநாட்டுச்சேரி கிராமத்தில் வெள்ளத்தால் சூழ்ந்து மூழ்கி உள்ள வாழை, மிளகாய் பயிர்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீரில் மூழ்கிய பயிர்களின் விவரங்களை விவசாயிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களை ஆய்வு செய்து வருகிறார்.

    அப்போது அவர் கூறும் போது:-

    வெள்ளப்பெருக்கு குறைந்த உடன் பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து விடும். அதன் பிறகு தோட்டக்கலை பயிர்களின் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும். அதனை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும். பின்னர் சேத விவரங்கள் கலெக்டர் மூலம் சென்னையில் உள்ள தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பப்படும் என்றார். இந்த ஆய்வின் போது பாபநாசம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பரிமேலழகன், துணை தோட்டக்கலை அலுவலர் ரவி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர்கள் காந்தி, வரதராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×