என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (வயது 40). இவர் இன்று காலை குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.
பின்பு அவர் வரிசையில் நின்று உள்ளே சென்றார். அப்போது அங்கு இருந்த கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட அதிகாரி முன்னிலையில் அமுதா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.
இதைப்பார்த்ததும் கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு ஓடி வந்தனர். அமுதா பிளேடால் கழுத்தை அறுத்ததை தடுத்து நிறுத்தினர்.
உடனே அமுதாவிடம் கலெக்டர் அன்புச்செல்வன், ஏன் கழுத்தை அறுத்து கொண்டீர்கள்? என்று கேட்டார். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது கணவர் சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். எனது கணவர் இறந்த பின்னர் அவருடைய உறவினர்கள் எங்களை ஏமாற்றி, எங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்தை அபகரித்து கொண்டனர்.
இதனால் எங்களுக்கு வீடு உள்ளிட்ட எதுவும் இல்லை. நாங்கள் நடுதெருவில் நிற்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்தேன். இப்படி கஷ்டப்படுவதை விட உயிரை மாய்த்து கொள்ளலாம் என முடிவு செய்து பிளேடால் எனது கழுத்தை அறுத்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அமுதாவுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிவுரை கூறினார். மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதி கூறினார்.
பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட அமுதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு போலீசாரிடம் கலெக்டர் தெரிவித்தார். உடனே அங்கிருந்த போலீசார், அமுதாவை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மனு கொடுக்க வந்த பெண் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் மார்கழி, ஆனி மாதத்தில் நடைபெறும் விழாவில் மூலவராகிய சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியே உற்சவராக புறப்பாடாகி தேரில் வலம் வந்து, மகா அபிஷேகமும், தரிசன நிகழ்வும் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித் திருமஞ்சன விழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 24). எம்.எஸ்.சி. பட்டதாரி.
இவர் போலீஸ் நண்பர் குழுவில் இருந்து வந்தார். பின்னர் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கருவை காட்டு பகுதியில் சீனிவாசன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவரது பின்தலையில் காயம் இருந்ததால், அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு உடலை கருவை காட்டு பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி முன்பு கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தாமரைச் செல்வி (26) சரணடைந்தார்.
அப்போது அவர், சீனிவாசனை நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கொன்றோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சரணடைந்த தாமரைச்செல்வியை புவனகிரி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் தாமரைச் செல்வியை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நான் 2 குழந்தைகளுடன் கீரப்பாளையத்தில் வசித்து வருகிறேன். 1½ ஆண்டுக்கு முன்பு சீனிவாசனை சந்தித்தேன். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தோம். அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் நான், கள்ளக்காதலன் சீனிவாசனிடம், இனிமேல் இங்கே வராதே என்று கூறினேன். ஆனால், அவர் நாம் உல்லாசமாக இருந்த படத்தை செல்போனில் படம் பிடித்துள்ளேன். அதை உனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என்றும், இணைய தளங்களில் வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினார்.

இதனால் நான் பயந்தேன். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இது குறித்து எனது தாய் லட்சுமியிடம் கூறினேன். அவரும் உடனே எனது வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். அதன்படி அவரும் இரவு வந்தார்.
அப்போது சீனிவாசனுக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆத்திரம் அடைந்த நான் சீனிவாசனை கீழே பிடித்து தள்ளினேன். இதில் அவர் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மயங்கி கிடந்த சீனிவாசனின் கழுத்தில் நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கயிற்றால் இறுக்கினோம். சிறிது நேரத்தில் சீனிவாசன் மூச்சுத்திணறி இறந்து விட்டார்.
பின்னர் அவரது உடலை நாங்கள் இருவரும் அருகில் உள்ள கருவை காட்டுக்கு தூக்கி சென்று அங்கு வீசினோம். பின்னர் அவர் வைத்திருந்த செல்போனையும் உடைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாமரைச்செல்வியின் தாய் லட்சுமியை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். லட்சுமி, தாமரைச்செல்வி ஆகிய 2 பேரையும் சிதம்பரம் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கடலூர் அண்ணாபாலம் அருகில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் புனித வளனார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை, தலைமை தபால் நிலையம் வழியாக டவுன்ஹாலை சென்றடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஒழிப்போம், ஒழிப்போம் போதைப்பொருட்களை ஒழிப்போம், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு மரணம் ஏற்படும். ஆகவே போதைப்பொருட்களை தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
இதில் கடலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், வாசக போட்டிகளில் பள்ளிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் கலெக்டர் அன்புசெல்வன் சென்னையில் பணிபுரிந்தபோது கொடிநாள் வசூலில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்ததை பாராட்டி தமிழக கவர்னரால் வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
இது தவிர சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும், 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நரேந்திரன் (வயது 15).
இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறையையொட்டி மாலையில் நரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர்.
அவர்கள் கிணற்றின் மேல் நின்று உள்ளே டைவ் அடித்தனர். கிணற்றில் ஆனந்தமாக குளித்தனர்.
பின்னர் நரேந்திரனின் நண்பர்கள் அனைவரும் குளித்து முடித்து விட்டு கரை திரும்பினர். ஆனால், நரேந்திரனை மட்டும் காண வில்லை.
உடனடியாக அவரது நண்பர்கள் ஊருக்குள் சென்று நரேந்திரனின் பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டதும் நரேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து கொண்டு கிணற்று பகுதிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நரேந்திரனின் உடல் கிடைக்கவில்லை. இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்களும் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அவர்களாலும் நரேந்திரனின் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர். இரவு 11 மணி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர்.
அப்போது நரேந்திரன் சேற்றில் சிக்கி பிணமாக கிடந்ததை பார்த்தனர். அதன் பின்னர் கயிறு கட்டி நரேந்திரனின் உடலை மீட்டனர்.
மகன் உடலை பார்த்து நரேந்திரனின் பெற்றோர் கதறி அழுதனர். இதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்பு நரேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வருண யாகம் நடைபெற்றது.
இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி கும்பிட்டார். முன்னதாக பாடலீஸ்வருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் குடத்தில் வைத்து இருந்த புனித நீரை ஊர்வலமாக கொண்டு சென்று பாடலீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இது கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்தது. தற்போது கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை.


தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு இயற்கையே காரணம். யாரையும் குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை.
நடிகர் சங்க தேர்தல் தள்ளி போனது ஏன் என்று எனக்கு தெரிவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.






